Skip to main content

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன்


இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பூமி சொந்தமில்ல
எல்லாமே இயேசு என் இயேசு
எல்லாம் இயேசு, இயேசு, இயேசு

பரலோகம் தாய்வீடு
அதை தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே -2
தாயகம் வரவேண்டும் தப்பாமலே - 2 - இயேசு

அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
இந்த அடிமையை தெரிந்தெடுத்தார் - இயேசு

லாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்துவிட்டேன் - நான் - இயேசு

பாடுகள் அனுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களி கூர்ந்து மகிழ்ந்திருப்பேன் - நான் - இயேசு