இயேசுவின் அன்பிற்கே ஆழம் அகலம் இல்லையே ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன்பை
ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன்பை
ஆளந்திட முடியாதே
பாவியாம் என்னை தெரிந்தெடுத்தார்
பாதையும் காட்டினாரே
ஜீவனுடத வழியும் சத்தியமே
நல் மேய்ப்பனும் அவரே - இயேசுவின்
நல்ல போராட்டம் போராட
வல்ல தேவன் அருள்வார்
ஓட்டத்தை முடித்து கடைசி மட்டும்
விசுவாசம் காத்து கொள்வாய் - இயேசுவின்
கல்வாரி நாயகன் சிந்தும் இரத்தம்
கறைகளை நீக்கிடவே
கர்த்தன் இயேசு இருகரம் நீட்டி
அழைப்பதை பாராயோ - இயேசுவின்