இயேசுவின் இரத்தம் ஜெயமே தூய இரத்தத்தால் வெற்றி வெற்றியே
தூய இரத்தத்தால் வெற்றி வெற்றியே
இயேசு இரத்தத்தால் சாத்தான் வீழ்ந்தான்
பாவத்தில் வாழ்ந்த காலத்தில்
நிம்மதி அற்ற வேளையில்
என்னை அழைத்தீர் உம்மை அண்டினேன்
உந்தன் இரத்தத்தால் என்னை கழுவினீர் - இயேசுவின்
வேதனை நிறைந்த நேரத்தில்
ஆபத்தில் பயந்த வேளையிலே
உம்மை கூப்பிட்டேன் என்னருகில் வந்தீர்
உந்தன் இரத்தத்தால் என்னை மூடினீர் - இயேசுவின்
சோதனை சூழ்ந்த நேரத்தில்
சேற்றினில் மூழ்கும் வேளையில்
உந்தன் கரத்தை என்மேல் வைத்தீர்
உந்தன் இரத்தத்தால் என்னை மூடினீர் - இயேசுவின்