Skip to main content

இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் சமயங்களில்


இயேசுவின் நாமத்தில் நாம்
கூடிடும் சமயங்களில்
பேசுவார் தியானத்திலே
அவர் தம் கிருபைகள் அளிக்க

மலைகள் விலகினாலும்
மா பர்வதம் நிலை பெயர்ந்தும்
என்றும் மாறாத அவர் கிருபை
தம் மக்களுக்காறுதலே

சீயோனில் அவர் நம்மையே
சிறு மந்தையாய் சேர்த்திடுவார்
நித்திய ராஜ்யத்தை தந்திடுவார்
சத்திய பாதையில் நடந்ததினால் - இயேசு

கஷ்டங்கள் கவலைகளில்
அன்புக் கரம் நம்மைத் தாங்கிடுமே
நஷ்டங்கள் மாறிடுமே
நாதன் இயேசுவின் நாமத்தினால் - இயேசு