Skip to main content

இயேசுவின் நாமம் அன்பின் நாமம் இன்பம் சுரந்திடும் மதுர நாமம்


இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

கூனர் நிமிர்ந்திட செவிடர் கேட்டிட
பாவம் போக்கிடும் பரலோக நாமம் - இயேசு

சாத்தான் வீழ்ந்திட சத்தியம் ஓங்கிட
சபையில் நிறைந்திடும் புனித நாமம் - இயேசு

வஞ்சகம் நீங்கிட தஞ்சம் பெற்றிட
வாஞ்சையில் நிறைந்திடும் வல்ல நாமம் - இயேசு

வறுமை நீக்கிட அருமை ணெபற்றிட
வளத்தில் நிறைந்திடும் வல்ல நாமம் - இயேசு

அநீதி நீக்கிட நீதி பெற்றிட
குருதி சிந்திடும் குறைவில்லாத நாமம் - இயேசு

உண்மை வளர்ந்திட ஊக்கம் உயர்ந்திட
உரிமை நிறைந்திடும் உன்னத நாமம் - இயேசு

அறுவடை பெருகிட ஆட்களை அழைத்திட
ஆவியைப் பொழிந்திடும் ஆனந்த நாமம் - இயேசு