இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது வல்லமையுள்ளது, வல்லமையுள்ளது - 2
வல்லமையுள்ளது, வல்லமையுள்ளது - 2
இயேசுவின் நாமத்தினால் இரண்டு மூன்று பேர்
கூடிடும் போது வந்திடுவாரே
ஜெபத்தைக் கேட்பாரே - இயேசு
கேளுங்கள் கொடுக்கப்படும் இயேசு உரைக்கிறார்
எதைக் கேட்டாலும் பெறுவீர் நிறைவாய்
இயேசுவின் நாமத்தினால் - இயேசு
வானத்தின் கீழ் எங்கும் பூமியின்
மேலேயும் இரட்சிக்கவல்ல நாமம்
வேறில்லை இயேசுவின் நாமமே - இயேசு
பூமியின் கீழானோர் யாவரின் முழங்கால்கள்
முடக்கும் நாமம் அதிகாரமுளள
இயேசுவின் நாமமே - இயேசு
சப்பாணி நடக்கச் செய்யும் குருடர் காண செய்யும்
மரித்தோர் எழும்ப அற்புதம் செய்யும்
இயேசுவின் நாமமே - இயேசு
சாத்தான் எதிர்த்தாலும் சதிபல செய்திட்டாலும்
சாத்தானை மேற்கொள்ள வல்லமை தந்திடும்
இயேசுவின் நாமமே - இயேசு