Skip to main content

இயேசு என் நேசர் சாரோனின் ரோஜா ஊற்றுண்ட தைலம் அவர் நாமம்


இயேசு என் நேசர் சாரோனின் ரோஜா
ஊற்றுண்ட தைலம் அவர் நாமம்

காட்டு மரங்களில் கிச்சிலி மரம் போல்
களைத்த நேரத்தில் கர்த்தரின் சமூகம்
அவரின் நிழலில் தங்கியே மகிழ்வேன்
மதுரக்கனி தருவார் - 2 - இயேசு

மரணம் போலவர் நேசம் வலியதே
அக்கினித் தழலாம் அவரின் நேசமே
அணைப்பதில்லையே திரண்ட தண்ணீரும்
ஆÞதியும் இணையில்லையே - 2 - இயேசு

வருத்தம் பாடுகள் வேதனை சகித்தே
வாசனை வீசிடும் தூபÞதம்பமிவர்
வேகமே வருவார் மேகங்களுடனே
நேசரை சேர்ந்திடுவோம் - 2 - இயேசு

மேனியில் வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரமாயிரம் பேரில் சிறந்தவர்
பூரணரூபமும் இன்பமுமானவர்
முற்றிலும் அழுகுள்ளவர் - 2 - இயேசு