Skip to main content

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது


இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் - இயேசு

கள்ளர் மத்தியில் ஒரு கள்ளனைப் போல
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பார் உனக்காய் அவர் கரங்கள்
பாரச் சிலுவை சுமந்தேகுதே - இயேசு

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவே - இயேசு