Skip to main content

இயேசு தான் பதிலும் காரணமும் என்னை நேசித்து காத்திடும் கர்த்தரவர்


இயேசு தான் பதிலும் காரணமும்
என்னை நேசித்து காத்திடும் கர்த்தரவர்

வழி தப்பிப் போன பாவி என்னை
கரம் கொண்டழைத்த கர்த்தரவர்
சிலுவையிலே தான் மரிக்க
தம்மை எனக்கு தந்தனரே - இயேசு

கவலையாய் கண்ணீர் சிந்தும் போது
கனிவுடன் தேடி வந்த நாதரல்லோ
கல்வாரியின் அன்பை எண்ணி
களிப்புடனே நான் படிடுவேன் - இயேசு

தூரமாய் போனத் துரோகி என்னை
தூக்கி எடுத்தார் தூய தேவன்
துதித்திடுவேன் பணிந்திடுவேன்
தூக்கிச் செல்வேன் அவர் திருநாமத்தை - இயேசு

வந்திடும் எந்த பாவியையும்
வல்லவர் சேர்ப்பார் தம் மந்தையில்
வந்திடும் இந்நேரமே
வா என்றழைக்கும் மீட்பரண்டை - இயேசு