Skip to main content

இயேசு தேவனைத் துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்


இயேசு தேவனைத் துதித்திடுவோம்
இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்
இதயம் பொங்க நன்றியுடனே
போற்றி உயர்த்தி பணிந்திடுவோம்

வார்த்தை வடிவாய் வந்தவரை
வாதை பிணியைத் தீர்த்தவரை
கண்ணின் மனிபோல் காத்த தயவை
கருணை உருவைத் துதித்திடுவோம் - இயேசு

அடிமை ரூபம் எடுத்தவரை
அகிலம் பணிந்திட செய்தவரை
உயர்ந்த நாமம் பெற்று விளங்கும்
உன்னதர் அவரைப் போற்றிடுவோம் - இயேசு

இருளை நீக்கும் மாஜோதியாய்
உலகில் வந்த அருள் வடிவை
ஜீவ ஒளியாய் திகழும் அவரை
கிருபை உருவைத் துதித்திடுவோம் - இயேசு

பாவ சாப மரணமதை
ஜெயித்து வென்று எழுந்தவரை
மகிமை சூழ திரும்ப வந்திடும்
வேந்தன் அவரைத் துதித்திடுவோம் - இயேசு