Skip to main content

இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் ஆத்ம நாதனின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம்


இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம்

பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜனே எங்கள் நாதனே
பயம் யாவும் நீக்கும் துணை ஆநீரே - சரணம்

இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றி தேற்றி காப்பீரே - சரணம்

பெவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்துமா சரீரத்தை படைக்கிறேன் - சரணம்

உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும் - சரணம்

அல்லேலூயா பாடிவந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - சரணம்