Skip to main content

இராஜாதி ராஜன் தேவாதி தேவன் வேகம் வருகின்றாரே


இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
வேகம் வருகின்றாரே

அனுபல்லவி
நம் இயேசு இராஜா வருவார்
எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம்

முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்
வெண்ணங்கி தரித்தவராய்
ஜெயக் கொடிகள் பிடித்திடுவார்
மீட்பின் கீதங்கள் பாடிடுவார்
ஆஹா என்ன பேரின்பம் அது - இரா

தீட்டுள்ள ஒன்றும் உள்ளே செல்லாத
மேலோக ஆட்சி இது
துக்கம் நோயும் அங்கே இல்லை
பசி தாகமும் அங்கே இல்லை
பெரும் அல்லேலூயா முழக்கமே

விருந்தாகும் இந்த ஆராதனையை
தந்துமே மகிழச் செய்தார்
மத்ய வானத்தில் ஓர் விருந்து
சிறப்பாகவே ஒதுக்கிடுவார்
மீட்கப்பட்டோர் மட்டும் அருந்த - இரா

என்ன சந்தோஷம் நித்திய சந்தோஷம்
மீட்பின் சந்தோஷம் இது
சஞ்சலம் தவிப்பும் இல்லையே
நித்திய மகிழ்ச்சி நம் தலை மேல்
இயேசு இரத்தத்தின் புண்ணியம் இது - இரா

நம் மீட்பர் உயிரோடிருப்பதால் நாம்
கண்ணால் அவரைக் காண்போம்
நாம் தூசிகள் உதறியே
தூய்மையை அணிந்திடுவோம்
நம் தூய தேவனைக் காண - இரா

பரிசுத்தவான்கள் பரிசுத்தமாகும்
காலம் இதுவே தானே
நீதி மானே நீதி செய்வாய்
பலனோடு நான் வாரேன் என்றார்
ஆமென் இயேசுவே வாரும்மையா - இரா