Skip to main content

இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார் உள்ளத்தின் நேயராய் யாவும் கேட்கிறார்


இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார்
உள்ளத்தின் நேயராய் யாவும் கேட்கிறார்
மறைவான விருந்தினாராய் திமும் வருகின்றார்
குடும்பத்தின் குறைகள் யாவும் அறிகிறார் - இயேசு

அள்ளி அணைப்பதாலே அன்னையாகுவார்
அடித்துத் திருத்துவதில் தந்தையாகுவார்
ஆபத்துக் காலத்திலே தோழனாகுவார்
கூறுமை நேரத்திலே வள்ளலாகுவார் - இயேசு இல்லத்தின்

துன்பங்கள் வரும்போது ஆறதலாவார்
தனிமையிலே தியங்கும் போது துணைவராகுவார்
காரிருளே சூழும்போது ஜோதி ஆகுவார்
கலங்கும் எந்தன் பாதையிலே காவலன் ஆவார் - இயேசு இல்லத்தின்

இயேசு வந்த இல்லத்திலே சந்தோஷம் உண்டு
எல்லாவற்றிலேயும் அங்கு ஸ்தோத்திரம் உண்டு
இடைவிடாமல் ஏறெடுக்கும் ஜெபங்களும் உண்டு
ஆவியிலே நிறைந்திருக்கும் அனுபவம் உண்டு - இயேசு இல்லத்தின்

வியாதி படுக்கையிலே வைத்தியராகுவார்
வேதனையைக் கண்டு தினமும் மனதுருகுவார்
காயங்களால் இன்று எந்தன் நோயைத் தீர்க்கிறார்
கவலையற்ற வாழ்க்கையினை கர்த்தர் தருகிறார் - இயேசு இல்லத்தின்

மேகத்தின்மேல் இதோ இயேசு வருகிறார்
கணப்பொழுதில் மரித்தோர்கள் மீண்டும் எழும்புவார்கள்
கர்த்தரோடு நாமும் அன்று ஆகாயம் செல்வோம்
கண்ணீர் யாவும் மறந்து அவரில் ஆனந்தம் கொள்வோம்
பரமானந்தம் கொள்வோம் - இயேசு இல்லத்தின்