Skip to main content

இயேசு நாமம் உயர்த்திடுவோம் இன்னல் நீக்கி வாழ்வளிக்கும்


இயேசு நாமம் உயர்த்திடுவோம்
இன்னல் நீக்கி வாழ்வளிக்கும்
மனதின் பாரம் நீக்கிடுமே
மாறாத இயேசு நாமமிதே

அற்புத அடையாளம் நடந்திடும்
அதிசயங்கள் பல புரிந்திடும்
நோய்களும் பேய்களும்
விரட்டி ஓட்டிடும் நாமமிதே - இயேசு

இரட்சணியம் அளித்திடும் நாமமே
இரட்சகர் இயேசு வின் நாமமே
பாவங்கள் போக்கிடும்
பரமன் இயேசுவின் நாமமிதே - இயேசு

நேற்றும் இன்றும் மாறிடா
நேசர் இயேசுவின் நாமமே
தேனிலும் இனிமையாய்
தேவன் இயேசுவின் நாமமிதே - இயேசு

இருளின் பயங்கள் நீக்கிடும்
இனிமை வாழ்வினில் தங்கிடும்
மகிழ்ச்சியும் தந்திடும்
மகிபன் இயேசுவின் நாமமிதே - இயேசு

இயேசுவின் நாமம் பரிசுத்தம்
நாவுகள் யாவும் துதித்திடும்
உயர்ந்தது சிறந்ததே
உன்னதர் இயேசுவின் நாமமிதே - இயேசு