Skip to main content

இரங்குமே என் இயேசுவே இரக்கத்தின் ஐஸ்வரியமே


இரங்குமே என் இயேசுவே
இரக்கத்தின் ஐஸ்வரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே

நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
நள்ளிரவின் நண்பனே
அன்பின் பிதா முன்னிலையில் இன்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபங்கேளுமே - இரங்குமே

உற்றார் பெற்றோரும் குடும்பங்களும்
மற்றும் பலர் மாள்வதைக்
கண்டு சகித்திடாதென்றும் ஜெபித்திடும்
கண்ணீர் ஜெபங்கேளுமே - இரங்குமே

அன்று நினிவே அழிவைக் கண்டே
அன்பே இரங்கினீரே
யோனா உரைத்த தம் ஆலோசனை தந்து
ஏழை ஜெபங்கேளுமே - இரங்குமே

எத்தனை துன்பம் சகித்துமீட்டீர்
எல்லாமே வீணாகுமோ
அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபங்கேளுமே - இரங்குமே

சோதனையினின்று இரட்சித்தீரே
சோதோமின் பக்தனையே
ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்
ஆதி ஜெபங்கேளுமே - இரங்குமே

ஐந்து கண்டத்தின் ஜனத்திற்காக
ஐங்காங்கள் ஏற்றீரே
தேவன் இல்லை என்று கூறி மடிவோரைத்
தேடும் ஜெபங்கேளுமே - இரங்குமே

பிள்ளைகள் அப்பம் கிடைத்திடாதோ
பேதைகள் கேட்டிடவே
மேஜை துணிக்கைகள் தாரும் எனக் கெஞ்சும்
மாந்தர் ஜெபங்கேளுமே - இரங்குமே

தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
பக்தர் ஜெபங்கேளுமே - இரங்குமே