Skip to main content

தாகத்தைத் தீரமையா அபிஷேகத்தைத் தாரமையா


தாகத்தைத் தீரமையா
அபிஷேகத்தைத் தாரமையா

ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம்
ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ
ஏக கர்த்தாவே ஏழைகள் மீது
இரங்கிடும் இப்போதே - எம்மில் - எங்கள்

சத்துரவாலே சகிக்க வொண்ணாத
எத்தனையோ இடர் வந்ததையோ
அத்தனையும் உமது அருட் பெலத்தாலே
நித்தமும் ஜெயம் கொள்ளுவோம் - நாங்கள் - எங்கள்

வேதத்தின் பொருளை விளங்கிட வல்ல
போதகராம் ஆவியானவரே
பாதத்தில் வீழ்ந்து பணிந்திடுவோம்
பரிசுத்தமாவோமே - நாங்கள் - எங்கள்

சுத்த ஜீவியமும் தூய ஊழியமும்
கர்த்தனுக் கேற்ற நற் காணிக்கையாம்
சித்தங்க கொண்டெம்மை நீர் பாவிப்பதாலே
மெத்தவும் பலன் காண்போம் - நாங்கள் - எங்கள்