Skip to main content

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி


தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்
இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்த கடைசி காலத்திலே
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே

ஏழாம் தலைமுறை ஏனோக்குரைத்த
எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
ஏசு கிறிஸ்துவின் சத்தியத்தை
ஏற்க மறுத்தவர் நடுங்குவார் - இயேசு

தம்மை விரோதித்த அவபக்தரை
செம்மை வழிகளில் செல்லாதவரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
அந்நாளிலே நியாயந் தீர்த்திடுவார் - இயேசு

எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய் - இயேசு

அந்தி கிறிஸ்தன்று அழிந்து மாள
அன்பரான் இயேசுவின் ஜெயம் சிறக்க
வாயில் இருபுறம் கருக்குள்ள
வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார் - இயேசு