Skip to main content

தேவனைத் துதியுங்கள் - அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் - ஆ, , , ,ஆ , , , ஆ , , , ஆ


தேவனைத் துதியுங்கள் - அல்லேலூயா
தேவனைத் துதியுங்கள் - ஆ, , , ,ஆ , , , ஆ , , , ஆ

அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்
பார்த்துத் துதியுங்கள் - அல்லேலூயா - தேவனை

அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக
அவரைத் துதியுங்கள்- அல்லேலூயா - தேவனை

மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா - தேவனை

எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடே - அல்லேலூயா - தேவனை

தம்புரோடும் நடனத்தோடும் - துதியுங்கள்
யாழோடும் தீங்குழலோடும் - அல்லேலூயா - தேவனை

ஓசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா - தேவனை

பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா - தேவனை

சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்
அல்லேலூயா ஆமென் - அல்லேலூயா - தேவனை