தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம் மா இருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம் -தாசரே
வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப் பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே - தாசரே
பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே -தாசரே
நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே -தாசரே
இந்து தேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து, அறிவிலயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட -தாசரே
மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெபித்திடுவோம் -தாசரே