Skip to main content

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்


தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்

உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்
அஞ்சாதிருங்கள்
அநீதிக்கு பழி வாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்
அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்

அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூய வழி
தீட்டுப்பட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை
மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள்

ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி
சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்

பார்வையற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள் போல துள்ளிக் குதிப்பார்கள்
ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்

வறண்ட நிலம் நீருற்றால்
நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்
நரிகள் தங்கும் வளைகள் எங்கும் கோரை முளைக்கும்
நாணலும் புல்லும் நிலைத்து நிற்கும்.