துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே
எங்கள் சந்தோஷமே
ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும்
எங்கள் சந்தோஷமே
எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததினால்
எங்கள் சந்தோஷமே
இந்த லோகம் தராத சந்தோஷமே
எங்கள் சந்தோஷமே . . . . துதிப்பதும்
காலை எழுவதும் பாடி மகிழ்வதும்
எங்கள் சந்தோஷமே
புது கிருபையால் தினம் நிறைவதும்
எங்கள் சந்தோஷமே . . . . துதிப்பதும்
பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும்
எங்கள் சந்தோஷமே
பரன் இயேசுவிலே களிகூறுவதும்
எங்கள் சந்தோஷமே . . . . துதிப்பதும்
இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும்
எங்கள் சந்தோஷமே
அவர் சுவிசேஷத்தை பறைசாற்றுவதும்
எங்கள் சந்தோஷமே . . . . துதிப்பதும்
கடைசி எக்காள தொனி கேட்டிடவே
எங்கள் சந்தோஷமே
கண்ணிமைப் பொழுதில் மருரூபமாவதும்
எங்கள் சந்தோஷமே . . . . துதிப்பதும்