Skip to main content

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே


தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் - தொழு

தலைதங்க மயமானவர்
தலைமயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம் சரணம் - தொழு

கண்கள் புறாக் கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் - தொழு

கரங்கள் பொன் வளயங்கள் போல
நிறங்களும் தந்தத்தைப் போல
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம் - தொழு

சமÞத சபையின் சிரசே
நமÞகாரம் எங்கள் அரசே
பிரதான எங்கள் மூலைக்கல்லே
ஏராளமாம் சரணம் சரணம் - தொழு

அடியார்களின் அÞதிபாரம்
அறிவுக்கெட்டாத விÞதாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் - தொழு

பார்த்திபனே கன ஸ்தோத்திரம்
கீர்த்தனம் மங்கள ஸ்தோத்திரம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென்