Skip to main content

துதி கீதமே பாடியே வாழ்த்தி வணங்கிடுவோம்


துதி கீதமே பாடியே
வாழ்த்தி வணங்கிடுவோம்
ஜோதியின் தேவனாம்
இயேசுவைப் பணிந்திடுவோம்

தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
தோளில் ஏந்தி சுமந்தனரே
சேதம் ஏதும் அணுகிடாமல்
காத்த தேவனைத் துதித்திடுவோம் - துதி

காரிருள் போன்ற வேளையில்
பாரில் நம்மைத் தேற்றினாரே
நம்பினோரைத் தாங்கும் தேவன்
இன்றும் என்றுமாய்த் துதித்திடுவோம் - துதி

பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
பாவம் யாவும் நீக்கினாரே
சொந்த இரத்தம் சிந்தி நம்மை
மீட்ட தேவனைத் துதித்திடுவோம் - துதி

கட்டுகள் யாவும் அறுத்துமே
கண்ணீர் கவலை அகற்றினாரே
துதியின் ஆடை அருளிச் செய்த
தேவ தேவனைத் துதித்திடுவோம் - துதி

வானத்தில் இயேசு தோன்றிடுவார்
ஆயத்தமாகி ஏகிடுவோம்
அன்பர் இயேசு சாயல் அடைந்து
என்றும் மகிழ்ந்தே வாழ்ந்திடுவோம் - துதி