திருகரத்தால் தாங்கியென்னை திருசித்தம் போல் நடத்திடுமே
திருசித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே
உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும் - திருகரத்தால்
ஆழ்கடலில் அலைகளினால்
அசையும் போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டு
சேர்ந்திடுவேன் அவர் கமூகம் - திருகரத்தால்
அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை - திருகரத்தால்