தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ சிறுமைத் தாழ்ச்சி அடைகிலேனே
சிறுமைத் தாழ்ச்சி அடைகிலேனே
அனுபல்லவி
ஆவலதாய் என்னைப் பைம்புல் மேல்
ஆவர் மேய்த்தவர் நீர் அருளுகின்றார் - தேவ
ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதியென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுமாய் நடத்துகின்றார் - தேவ
சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வான பரன் என்னோடிருப்பார்
வளைதடியும் கோலுமே தேற்றும் - தேவ
பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேர் படுத்தி
சுக தைலம் கொண்டென் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார் - தேவ
ஆயுள் முழுவதும் என் பாத்திரம்
அருளும் நலமுமாய் நிரப்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன் - தேவ