தினம் தினம் நம் தேவனையே மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் - (2)
மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் - (2)
இரக்கம் உருக்கம் நிறைந்தவரே
மறவாமல் நம்மை காப்பவரே (2)
சிறந்த நாமம் உடையவரே
அரணான துணையாய் இருப்பவரே ஶி (2) - தினம்
அன்பின் உருவம் உடையவரே
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே
ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே
ஆன்னையை போல அணைப்பவரே - (2) - தினம்
விண்ணில் மகிமை உடையவரே
மண்ணில் சமதானம் தருபவரே
என்னில் தினமும் வாழ்பவரே
உன்னில் அழைத்தால் வருபவரே - (2) - தினம்