தேவ தேவன் பாலகனாய் தேவலோகம் துறந்தவராய்
தேவ தேவன் பாலகனாய்
தேவலோகம் துறந்தவராய்
மானிடரின் சாபம் நீங்க
மாநிலத்தில் அவதரித்தார்
அல்லேலூயா!! அல்லேலூயா!!
அற்புத பாலன் இயேசுவுக்கே
பரம சேனை இரவில் தோன்றி
பாரில் பாடி மகிழ்ந்திடவே
ஆநிரையின் குடில் சிறக்க
ஆதவனாய் உதித்தனரே - அல்லேலூயா
ஆயர் மனது அதிசயிக்க
பேயின் உள்ளம் நடுநடுங்க
தாயினும் மேல் அன்புள்ளவராய்
தயாபரன் தான் அவதரித்தார் - அல்லேலூயா
லோகப் பாவம் சுமப்பதற்கோ
தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே
வேதம் நிறை வேற்றுதற்கோ
ஆதியாக அவதரித்தார் - அல்லேலூயா
தாரகையாய் விளங்கிடவோ
பாரில் என்னை நடத்திடவோ
ஆருமில்லா என்னைத் தேடி
அண்ணலே நீர் ஆதரித்தீர் - அல்லேலூயா