துதி துதி என் மனமே துதிகளின் உன்னதனை
துதிகளின் உன்னதனை
தூத கணங்கள் வாழ்த்தி புகழ்ந்திடுவோம்
வானவர் இயேசுவின் நாமமதே
பாவமாம் காரிருள் மூடிடும் வேளை
இரட்சிக்க தீபமாய் வந்தார்
அற்புதமாய் நம்மை நடத்திடும் இயேசு
அன்பரின் காயங்கள் கண்டே - துதி
கல்வாரியில் அன்று சிந்தின இரத்தம்
கழுவிடும் பாவங்களை
கண்ணீரை துடைக்கும் அவரது அன்பு
கல்மனம் கரைத்திடுமே - துதி
சீக்கிரமாய் இதோ வருகிறேன் என்றவர்
சீக்கிரம் வந்திடுவார்
ஊன்னத தேவனின் மகிமையைக் காண
ஊள்ளமும் ஏங்கிடுதே - துதி