Skip to main content

துதியே துதியே துதியே துதியே துதியுமக்கே துதியே


துதியே துதியே துதியே துதியே
துதியுமக்கே துதியே

தூதகணங்கள் தூயவருந்தன்
பாத சேவை செய்து பணிந்துமைத் துதிக்கும்
வேத முதல்வனும் நீர் - துதியே

அண்ட சராசரம் அனைத்துமே ஒன்றாய்
விண்டலாதிபா வியந்தும்மை துதிக்கும்
முண்டலாதிபனும் நீர்

பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்
தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர்

அந்தகாரமதின் அடிமைகளுக்கு
சுந்தர ஒளியைச் சுடரிடச் செய்ய
வந்த குமாரனும் நீர் - துதியே

மீட்கப்பட்டவர் ஆனந்தங்கொண்டு
பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
ஆட்கொண்ட நாதனும் நீர்

கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜாவே
நித்தியமான எம் தேவாதி தேவனே
துத்தியம் செய்திடுவோம் - துதியே