Skip to main content

தேவையானது ஒன்றே தேவனே உம் சமூகமே தேடியே நாடியே ஓடி வந்தேன் பாதமே


தேவையானது ஒன்றே தேவனே உம் சமூகமே
தேடியே நாடியே ஓடி வந்தேன் பாதமே
சரணங்கள்

கேளுங்கள் தந்திடுவேன் என்றீரே
தட்டுங்கள் திறந்திடுவேன் என்றீரே
தேடுகிற எவனும் கண்டடைவான் என்றீரே
தேவா உம் சமூகத்தை ஊற்றிடும்
போதுமே போதுமே உந்தன் சமூகமே
போதுமே போதுமே போதுமே உம் சமூகமே

உந்தன் சமூகம் எனக்கு ஆனந்தம்
உந்தன் சமூகம் எனக்கு பேரின்பம்
உந்தன் சமூகத்தாலே பர்வதங்கள் மெழுகுபோல்
எரிந்திடும் உருகிடும் உருகிடும்
போதுமே போதுமே உந்தன் சமூகமே
போதுமே போதுமே போதுமே உம் சமூகமே

நல்ல பங்கை நாடி வந்தேன் இயேசுவே
நல் அருமை போதகர் என் இயேசுவே
பாதத்தில் அமர்ந்து உம் வசனத்தை தியானிப்பேன்
வசனமே சிறுமையில் ஆறுதல்
போதுமே போதுமே உந்தன் சமூகமே
போதுமே போதுமே போதுமே உம் சமூகமே

நித்தம் என்னை நடத்துவீர் உம் சமூகத்தால்
சித்தம் செய்ய போதிப்பீர் உம் வாக்கினால்
கமூகம் முன்னே சென்றிடும்
மகிமை பின்னே தங்கிடும்
நித்திய வழியில் என்னை நடத்துவீர்
போதுமே போதுமே உந்தன் சமூகமே
போதுமே போதுமே போதுமே உம் சமூகமே