Skip to main content

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை (2) தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை (2)


தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை (2)
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை (2)

உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் - (2)
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் - இந்த
வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க - 2 - தேவ

செவிகளையே திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் - (2)
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே - இந்த
வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க -2 - தேவ

எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே - (2)
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே - எங்கள்
வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க - 2 - தேவ

தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும்
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே - இன்று
வாழ்க வழ்க உம் நாமம் வாழ்க -2 - தேவ

குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே
கறைபோக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே - பாவ
வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க - 2 - தேவ