Skip to main content

தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க தூயவர் வருகையின் நாளுமே நெருங்குதே - 2


தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க
தூயவர் வருகையின் நாளுமே நெருங்குதே - 2
ஆயத்தமுள்ளோர் ஆவியும் மகிழ்ந்திட
அந்த நாள் வெகு சந்தோஷ நாள் - 2

மகிமையின் சாயலை மணவாட்டி அணிய
வெண்வஸ்திரம் கிரீடம் சூடியே மகிழ
பொற்றள வீதியில் நடந்துமே உலாவும்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள் (2( - தூதர்கள்

துன்பம் துக்கம் இல்லை என்றுமே இன்பம்
பஞ்சம் பசியில்லை என்றும் நிறைவே
தூதர்கள் போற்றிடும் தூயரை நினைத்தால்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள் - தூதர்கள்

திருடனைப் போல நானும் வருவேன்
தீவிரம் விழித்து ஜெபித்திருங்கள்
அன்பர் வாக்கை நான் என்றும் நினைத்தால்
அந்த நாள் வெக சந்தோஷ நாள் - தூதர்கள்

மன்னவர் இயேசுவை விண்ணவரோடு
முகமுகமாய்க் கண்டு துதித்துப் பாடிட
பொற்பாதம் முத்தம் செய்துமே மகிழ்ந்திடும்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள் - தூதர்கள்

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் நான்
விண்ணவர் சேனையோடு பறந்திடுவேன் நான்
இரட்சகர் இயேசுவை கண்டிடுவேன் நான்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள் - தூதர்கள்