Skip to main content

துதி உமக்கே இயேசு நாதா வாழ்த்திடுவோம் உம்மையே


துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உம்மையே
அனபல்லவி
நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
எண்ணியே துதித்திடுவோம்

ஆதி அந்தமில்லா அனாதி தேவனே
அடைக்கலமானீர் எமக்கு நீரே
மாறா விசுவாசத்தை எமக்கு தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் -துதி

கடந்த நளெல்லாம் வழுவாமல் எம்மை
காருண்யத்தாலே காத்தீரே
வல்லதேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம் - துதி

தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தந்தை போல் எம்மை சுமந்தீரே
ஜீவனை தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம் - துதி

ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
ஜீவனை வைத்தே துதித்திடவே
நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் - துதி

உன்னதர் உந்தன் மகிமையைக் காண
சீயோனை எமக்கு காட்டினீரே
இயேசுவே உந்தன் வருகையின் நாளை
எண்ணியே துதித்திடுவோம் - துதி