துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே
இயேசுவையே
புது ஜீவனால் எம்மை புதுமையாய் மாற்றி
திருச் சித்தம் செய்திடவே -உம்
மகிமையின் ஆவியால் நிறைந்தே மகிழ
மாதயவீந்திடுமே - துதி
கடும் புயல்களிலே கலங்கிடாதெம்மை
காத்திடும் கர்த்தரவர் - திரு
கரங்களை நீட்டி மறைவிடம் ஈந்து
மனமதை தேற்றினாரே - துதி
சுத்தர்களுடனே சீர் பொருந்திடவே
நித்தமும் கிருபை ஈந்தார் - தம்
ஜீவனை யீந்து சாவினை ஜெயித்து
சேயராய் மாற்றினாரே - துதி
சிலுவை சுமந்தவர் பின் சென்றிடுவோம்
சேவையும் செய்திடவே -உயர்
பெலமதை யீந்து பயமதை நீக்கி
பறந்திடக் கிருபை செய்வார் - துதி
அவர் வரும் வேளையை அனுதினம் நோக்கி
ஆயத்தமாகிடுவோம் - எம்மை
அழைத்தவரே கரம் பிடித்தவரே என்றும்
அன்புடன் நடத்திடுமே - துதி