Skip to main content

தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே


தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்
கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றமுள்ளது - தேவ

சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ

அக்கினி சோதடனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ

காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ

வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ

நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே - தேவ