Skip to main content

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயாதி தூயனை துதித்திடுவேன்


துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயாதி தூயனை துதித்திடுவேன்
தூயவர் சமூகம் இறங்கிடுதே
துதிகளின் தொனியால் மகிழ்ந்திடுவேன்
என் அன்பரே வந்திடுவீர்
வந்து என் வாஞ்சை தீர்த்திடுமே

பரிசுத்த ஜீவியம் தாருமையா
பரிசுத்த சாயலில் நான் வளர
கழுகினைப் போல புது பெலன் அடைந்து
கர்த்தா உம் கிருபையால் நான் நிலைக்க - என்

ஆவியின் வரங்கள் தாருமையா
ஆவியில் அனலாய் நான் நிலைக்க
ஆவியின் கண்கள் அளித்திடுவீர்
அனுதினம் சாட்சியாய் நான் உழைக்க - என்

இயேசுவே உம் சாயல் அணிந்திடவே
இயேசுவே தினம் தினம் உதவி செய்வீர்
பூரணர் வெளிப்படும் நாள் தனிலே
பூரண சாயலில் நிலை நிற்கவே - என்

நாசமோ மோசமோ பட்டயமோ
பாசமாய் உமக் கென்று வாழ்ந்திடவே
இரத்த சாட்சியாய் மரித்தாலும்
இரட்சிப்பின் தேவனில் களி கூர்ந்திட - என்