தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர்
ஊற்றும் ஐயா உம் வல்லமையை
(நான்) தாகத்தோடு காத்திருக்கிறேன் - 2
மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே - 2
முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்றவேண்டுமே
கனவுகள் காட்சிகள் கான வேண்டுமே -2
நீரோடை அருகிலுலூள மரங்களைப் போல
நித்தமும் தவறாமல் கனி தரவேண்டும் - 2
புதிய கூர்மையான கருவியாகனும்
பூமியெங்கும் சுவைதரும் உப்பாகனும் - 2
கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் - 2
வனாந்திரம் செழ்ப்பான தோட்டமாகனும்
வயல்வெளி அடர்ந்த காடாகனும் -2
நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும் வளரவேண்டுமே -2
தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும் -2