Skip to main content

திரும்பு! திரும்பு! மனந்திரும்பு! விரும்பு! விரும்பு! இரட்சிப்பை விரும்பு!


திரும்பு! திரும்பு! மனந்திரும்பு!
விரும்பு! விரும்பு! இரட்சிப்பை விரும்பு!
விரும்பினால் உள்ளத்தில் உவகை அரும்பும்
நிறைந்திடும் மனதில் மகிழ்வு நிறைந்திடும்
வந்திடும் வாழ்வில் அமைதி வந்திடும்
நீயும் பெற்றிட வா!

வாலிபனே காலமதை வீணில் கழித்து அலையாதே
கன்னிகையே அழகென்று அரைகுறை ஆடை அணியாதே
நாகரீகமென்று பெண்களை போன்று முடியை வளர்க்காதே
பெண்மையை மறந்து ஆணுடை தரித்து அலைந்து திரியாதே

இளைஞரே புகைப்பதினால் அற்ப ஆயுளில் மடிவீரே
போதையதில் மதிமயங்கி வாழ்வை கெடுத்துக் கொள்ளாதீர்
தறிகெட்டு நீயும் திரைப்படம் பார்த்து நெறிகெட்டுப் போகாதே
உந்தன் சரீரம் தேவனின் ஆலயம் அதனைக் கொடுக்காதே

மங்கையரே வீண் பேச்சில் சிரித்து காலம் கழிக்காதீர்
ஆணோடு சமமென்று வழுக்கி விழுந்து போகாதீர்
சாயத்தை முகத்தில் பூசியே இயற்கை அழகைக் கெடுக்காதே
பொன் நகை தேடி புன்னகை இழந்து புலம்பி தவிக்காதே

தீமையதை நாவினால் பேசி அகமதை கெடுக்காதே
பண்பற்ற நூல்களினால் சிந்தையை கெடுத்துக் கொள்ளாதே
அநியாத்தால் வந்த செல்வம் என்றும் ஒன்றுக்கும் உதவாதே
பணத்தின் ஆசை தீமைக்கும் வேராம் அதனை விரும்பாதே

மாம்சத்தின் செய்கைகள் மரணத்தில் கொண்டு முடித்து விடும்
ஆவியின் கனிகளொ நித்திய ஜீவனைத் தந்து விடும்
மனமது திரும்பி மூழ்கி ஞானÞநானமும் பெற்றுவிடு
பரிசுத்த ஆவிவழி நடத்திடுமே அதனில் நிறைந்துவிடு