Skip to main content

துதிகளின் பாத்திரனே துதிதனை ஏந்தி நின்றோம்


துதிகளின் பாத்திரனே
துதிதனை ஏந்தி நின்றோம்
தூயாவி அருள் தாருமே
துதிகளின் பாத்திரனே
கடந்த எம் நாட்கள் எல்லாம்
கருணையாய் நடத்தினாரே
கருத்துடன் மா தயவை
கனிவுடன் பாடிடுவோம் -துதிகளின்
ஆபத்து நாளினிலே
ஏற்ற சகாயர் நீரே
அதிசயம் செய்பவரே
துதிகளை செலுத்துகின்றோம் - துதிகளின்
முற்றுமாய் பலியாகவே
அப்பணித்தோம் எம்மையே
ஆளுகை செய்திடுவீர்
ஆசீரை அளித்திடுவீர்
பாவங்கள் போக்கி அவர்
சாபங்கள் மாற்றினாரே
பரிசுத்த மீட்பதனை
பரமனே அளித்தனரே - துதிகளின்
மகிமையின் விண்ணரசர்
மகத்துவ தேவனவர்
மகிமையாம் கனமதனை
மகிழ்வுடன் செலுத்துகின்றோம் - துதிகளின்