Skip to main content

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் இயேசுவே துதித்திடுவோம் துதித்திடுவோம்


துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் இயேசுவே
துதித்திடுவோம் துதித்திடுவோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
உம்மையே என்றுமே வாழ்த்திடுவோம்
வானமும் பூமியுமே
சமுத்திர அலைகளுமே

உம்மையே என்றுமே துதிக்கும்
நானும் உம்மை துதிப்பேன்
இயேசுவே ஸ்தோத்திரம் (2)
என்றென்றும் ஸ்தோத்திரமே

பாவங்கள் சாபங்கள்
மீறுதல்கள் யாவையுமே
மேகத்தை போலவே நீக்கினார்
என்னை மீட்டுக்கொண்டார்

ஒவ்வொரு நாளிலுமே
அற்புதமாய் நடத்துகின்றார்
தேவைகள் யாவையும் சந்திப்பார்
தேவனே உம்மையே துதிப்பேன்