Skip to main content

துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா


துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா
அல்லேலூயா (7)

தேவனே நீர் பெரியவர், தேவனே நீர் வல்லவர்
தேவனே நீர் மகத்துவர், தேவனே நீர் நல்லவர் - அல்லேலூயா

கர்த்தர் இரக்கமுள்ளவர், கர்த்தர் உருக்கமானவர்
கர்த்தர் சாந்தமுள்ளவர், கர்த்தர் கிருபை மிகுந்தவர் - அல்லேலூயா

கர்த்தர் ஆவியானவர், கர்த்தரே வான் அக்கினி
கர்த்தர் தேற்றரவாளன், கர்த்தர் உன்னத பெலன் - அல்லேலூயா

இயேசுவே நீர் இரட்சகர், இயேசுவே நீர் வைத்தியர்
இயேசுவே நீர் அற்புதர், என்றுமே மாறாதவர் - அல்லேலூயா

இயேசுவே மணவாளன் - சீக்கிரம் வருகிறார்
இயேசுவே வாரும் வாரும் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் - அல்லேலூயா