துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை
தேவன் நம்மை வந்தடைய செய்தார்,
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்,
அற்புதங்கள் செய்யும் சர்வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார். - துதிப்போம்
தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே
சர்வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்து காத்திடுவார் - துதிப்போம்
கூப்பிடும் வேளையில் என்னை
தப்புவிக்க சீக்கிரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடத்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் - துதிப்போம்
பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒருபோதும் வாதை என் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் - துதிப்போம்
அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன் - துதிப்போம்