Skip to main content

துதிப்போம் நன்றியுடன் சென்ற காலம் முழுவதும் காத்த தேவனை


துதிப்போம் நன்றியுடன்
சென்ற காலம் முழுவதும் காத்த தேவனை
இதய நிறைவுடன்
ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்வோம்
ஆனந்தமாகப் பாடிடுவோம்
என்றென்றும் அவர் செய்த நன்மைகளை
நினைத்தே போற்றிடுவோம்

இம்மட்டும் வாழ்வில் உதவிசெய்த
எபநேசர் அவரே
இன்னமும் வாழ்வில் நம்முடன் இருக்கும்
இம்மானுவேல் அவரே

துன்பம் துயரம் தொல்லை இடர்கள்
எம்மை சூழ்ந்தபோதும்
ஓங்கிய பாதுகாத்த
வல்ல தேவன் அவரே

நல்ல சுகமும் பெலனும் தந்து
நல் வழி நடத்தினாரே
கூப்பிட்ட வேளை ஜெபத்தைக் கேட்ட
நல்ல தேவன் அவரே

கலக்கம் நெருக்கம் பிரிவு வந்து
சோர்ந்திடும் வேளையிலே
பெலப்படுத்தி ஜெயமும் தந்தீர்
ஊழியப் பாதையில்