Skip to main content

துதியில் தேவா வருவாய் - நான் துதித்துத் துதித்து உம்மைப் பாடி மகிழ்ந்திடவே


துதியில் தேவா வருவாய் - நான்
துதித்துத் துதித்து உம்மைப் பாடி மகிழ்ந்திடவே

அனுபல்லவி
தூயவர் கோனே துணைபுரிமானே
தூய்மை கிடைக்குமென்று துதிக்கிறேன் நானே

துன்பம் இந்நேரம் - உம்மைத்
தொடரத் தொடரப் பேயின் கோபம் மிகுந்திடுதே
இன்பம் மிகுதே தம்பிரான் பாதம்
கெம்பீரம் பாடி அம்பரமேக - துதி

கலங்குதே இந்நேரம் - என்
கலமும் துலக்கமின்றி மயங்கித் தியங்குகிறேன்
காடி தான் தேனோ கல்வாரி மலையில்
கருதுவோர் பருகும் கானாவூர் ரசமே - துதி

அகமே வரந்தருவாய் - நான்
அல்லும் பகலும் உம்மைப் பாடி மகிழ்ந்திடவே
தியாகஞ் செய்யவே ஏகோவாபாதம்
தாகம் மிகுந்தேன் ஏழையிந்நேரம் - துதி

ஆறு லட்சம் பேரில் - நடு
உதித்து உதித்துச் சென்ற அதிரூப கொரூபா
கூறினீரல்லோ கூடியிருக்கக்
கொற்றவர் சேவை குறைவின்றி ஒழுக - துதி

மகிபன் இயேசு துரையே - நான்
மகிழ்ந்து மகிழ்ந்து தினம் பாடித்துதித்து வரும்
மங்கையர் கானம் மாசில்லாதல்லோ
தங்கப் பொன்னேசு சர்வாதிகாரா - துதி