துதியுங்கள் நம் தேவனை போற்றுங்கள் வல்லவரை
போற்றுங்கள் வல்லவரை
தூதர்கள் போற்றிடும் தூய தேவனை
பாடிடுவோம்
பாவ சேற்றில் இருந்த என்னை
பாசத்தால் அவர் இழுத்துக் கொண்டார்
பாரமான பாவசுமைதனையே
பரமன் நீக்கினார் - துதி
கடந்த வாழ்நாளில் கர்த்தர் என்னை
கண்மணி போல பாதுகாத்தார்
காலமெல்லாம் உம்மை நினைத்திடுவோம்
கருத்தாய்ப் பாடுவோம் - துதி
தாயின் கருவில் இருந்த என்னை
தள்ளிடாமல் எடுத்தணைத்தார்
தாகம் தீர ஜீவ தண்ணீரையும்
தயவாய் தந்திட்டார் - துதி