துதி செய் நீ மனமே துதிகளை பாடியே
துதிகளை பாடியே
துதி பெற பாத்திரராய்
தூயவர் ஏசுவே
பரலோக மகிமை துறந்தவரே
பாவ இவ்வுலகில் வந்தவரே
பரிசுத்தராகவே வாழ்ந்தவரே
பாவியை மீட்கவே வந்தவரே - துதி
கருணையின் உள்ளம் படைத்தவரே
குற்றங்கள் யாவையும் சுமந்தவரே
குரசினில் எனக்காய் மரித்தவரே
குரதியை சிந்தி மீட்டவரே - துதி
இயேசுவை அன்றி வேறொருவர்
காசினில் உண்டோ சொல் மனமே
நேசரின் அன்பை என்றும் உணர்ந்து
தாசரும் அவர் பாதத்தில் விழுந்து - துதி
மானிடர் எல்லாம் விட்டோடினும்
மாசற்ற தேவன் நம்மோடிருப்பார்
ஆர்ப்பரித்தே என்றுமே மகிழ்வேன்
ஆண்டாண்டு காலம் நம்மை காப்பதால் - துதி
தாவீதின் வேராய் வந்தவரே
தாசர்கள் உள்ளத்தில் நிறைந்தவரே
உள்ளத்தை தூய்மையாய் மாற்றவாரே
பரிசுத்த பங்கை தந்தவரே - துதி
நேசரின் மார்பினில் சார்ந்திடுவேன்
நேசத்தால் நம்மை நிரப்பிடுவார்
நாசம் என்றும் நம்மை அணுகாமலே
ஆதரித்து என்றும் காத்திடுவார் - துதி
நேசரின் வருகை நெருங்கிடுதே
நாச லோகை விட்டு சென்றிடுவேன்
எக்காள சத்தம் தொனித்திடுமே
மத்திய ஆகாயத்தை சேருவோம் - துதி