Skip to main content

தூய நல் ஆவி நிறைவுடன் இறங்கி ஊற்றிடுமே எம்மில் ஊற்றிடுமே


தூய நல் ஆவி நிறைவுடன் இறங்கி
ஊற்றிடுமே எம்மில் ஊற்றிடுமே
அல்லேலூயா பாடப் பாட
அற்புத வல்லமை பெருகிடுதே

பாவ சாபங்கள் யாவையுமே
நீக்கி எம்மை நிரப்பிடுமே
வல்ல தேவாவியே வல்லமை தாரும்
வல்ல இயேசுவின் வாக்கிதுவே - தூய

இயேசு என்னில் வெளிப்படவே
உன்னத ஆவியால் நிரப்பிடுமே
ஜீவனை தந்து சேவையே செய்திட
தேவ பெலனை ஈந்திடுமே - தூய

ஆவி வரங்கள் அனைத்தையுமே
ஆவலாய் நான் நாடிடவே
வல்ல அபிஷேகம் தயவுடன் அளித்து
பாரில் என்னை பெலப்படுத்தும் - தூய

தேவ ஆவியின் நிறைவுடனே
பாடி உம்மைத் துதித்திடவே
ஆவியில் நிறைந்து அனுதினம் ஜெபிக்க
அற்புத வல்லமை அளித்திடுமே - தூய

ஆவி ஆத்துமா தேகமதை
ஆவலாகப் படைத்திடவே
ஆதி அன்பு காட்டிட என்னை
தூய ஆவியால் பெலப்படுத்தும் - தூய