Skip to main content

தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம் தினம் உம்மையே நோக்கி பார்க்கிறேன்


தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தினம் தினம் உம்மையே நோக்கி பார்க்கிறேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

உலக பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனய்யா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனைய்யா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன் - தெய்வமே

உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திடுவேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரை துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன் - தெய்வமே

எதை நான் பேச வேண்டுமென்று
கற்றுத் தாருமய்யா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமய்யா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே - தெய்வமே