Skip to main content

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு


தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்

பலத்தினாலும் அல்லவே
பராக்கிரமும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே - தேசமே

தாய் மறந்தாலும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தாரே
வலங்கரத்தாலே தாங்கி உன்னை
சகாயம் செய்து உயர்த்திடுவார் - தேசமே

கசந்த மாறா மதுரமாகும்
கொடிய எகிப்து அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் - தேசமே

கிறிஸ்து இயேசு சிந்தையில்
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
ஆவியின் பெலத்தால் அனதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய் - தேசமே

மாமிசமான யாவர் மீதும்
உன்னத ஆவியைப் பொழியுவார்
ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்
எழும்பி சேவையும் செய்திடுவோம் - தேசமே