தேவனால் கூடாதது ஒன்றுமில்லை (2) எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும்
எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும்
அற்புதம் இயேசு செய்திடுவார் (2)
ஆச்சரியமானவர் மகத்துவமானவர்
செயலிலே உன்னதமானவர்
அவர் ஆவியினால் விடுதலை உண்டு
அவர் ஆவியினால் வல்லமை பெறுவாய்
புதிய பெலனை பெற்றிடுவாய் ஶி (2) - தேவ
அவர் சொல்ல ஆகும் கட்டளைக்கு நிற்கும்
வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார்
வசனம் தீவிரமாய் செல்கின்றதே - தேவ
அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்று
விசுவாசித்தால் மகிமையை காண்பாய்
விசுவாசித்தால் கண்டிடுவாய் - தேவ
ஆராய்ந்து முடியா காரியங்களையும்
எண்ணி முடியா அதிசயங்களையும்
அற்புதர் இன்றே செய்திடுவார் - தேவ